Tuesday, October 12, 2010

வழிகாட்டியே.....

உணர்வில்லாமல்  உணர்ந்தேன்....
                           தாய் எனக்கு உலகத்தை முதல் முறையாய்
                          அறிமுகபடுத்தியப்போது ...
அறியாமல் அறிந்தேன் ....
                          ஆசிரியர் எனக்கு இதுதான் உலகம் என
                          சுட்டிக்காட்டியபோது ...
தெரியாமல் தெரிந்தேன் ...
                           நண்பன் எனக்கு இப்படிதான் உலகம் என
                           தெரியபடுத்தியப்போது ...

புரியாமல் புரிந்தேன்....
                          காலம் எனக்கு இதுதான் சோகம் என
                          புரியப்படுத்தியபோது ...
உறையாமல் உறைந்தேன் ....
                         விழியின் வலியை போக்கி நீங்கள் எனக்கு
                          வழிக்காட்டியப்போது....

2 comments: